இந்திய அணிக்கு தேர்வாகும் வகையில் தமிழகத்தில் சிறந்த பயிற்சி முகாம்கள் : தமிழக கிரிக்கெட் வீரர் சதீஷ்

கோவை : தமிழகத்திலிருந்து மேலும் பல வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வாகும் வகையில், பயிற்சி முகாம்கள் திறம்பட செயல்படுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் ராஜகோபால் சதீஷ் கோவையில் தெரிவித்துள்ளார்.

கோவை : தமிழகத்திலிருந்து மேலும் பல வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வாகும் வகையில், பயிற்சி முகாம்கள் திறம்பட செயல்படுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் ராஜகோபால் சதீஷ் கோவையில் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டில் தமிழக வீரர்களின் ஆதிக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. கிரிக்கெட்டில் இளம் தலைமுறையினரை ஊக்குவிக்கும் விதமாக, சர்வதேச அளவிலான கிரிக்கெட் பயிற்சி முகாம் கோவையில் தொடங்கப்பட்டது. இதற்கான விழா கோவைப்புதூரில் உள்ள தனியார் அகாடமி மையத்தில் நடைபெற்றது. கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் பங்கேற்று பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். 

இவ்விழாவில், தமிழக கிரிக்கெட் அணியின் வீரர்கள் அருண் கார்த்திக் மற்றும் ராஜகோபால் சதீஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அவர்கள், தற்போது இந்திய பெண்கள் அணி கிரிக்கெட் வீராங்கனைகளும், உலக அளவில் சாதித்து வருகின்றனர். மாணவியரும் அதிக அளவில் கிரிக்கெட் பயிற்சி முகாமில் ஈடுபட்டு, தங்கள் விளையாட்டு திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். எனக் கேட்டுக் கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, கிரிக்கெட் வீரர் சதீஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக கிரிக்கெட் பயிற்சி முகாம்கள் திறம்பட செயல்படுகின்றன. இதனால், இந்திய கிரிக்கெட் அணிக்காக மேலும் பல தமிழக வீரர்கள் விளையாட வாய்ப்புள்ளது," என்றார். 

Newsletter

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...