பராமரிப்பின்றி கிடக்கும் 'சூழல் சுற்றுலா' பகுதி: சீரமைக்கச் சுற்றுலா பயணிகள் கோரிக்கை

நீலகிரி: கோடை சீசன் தொடங்க உள்ள நிலையில், நீலகிரியில் பராமரிப்பின்றி கிடக்கும் சூழல் சுற்றுலா பகுதியை முறையாக பராமரித்து, சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி: கோடை சீசன் தொடங்க உள்ள நிலையில், நீலகிரியில் பராமரிப்பின்றி கிடக்கும் சூழல் சுற்றுலா பகுதியை முறையாக பராமரித்து, சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மலை மாவட்டமான நீலகிரியில் 'சூழல் சுற்றுலா' என்ற பெயரில் வனப்பகுதிகளை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் வனத்துறை சார்பில் சுற்றுலாத்தலம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, கேர்ன்ஹில் வனப்பகுதியில் தொங்கு பாலம், வனவிலங்குகளான சிறுத்தை, புலி, மான், கரடி, நாகபாம்பு, மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் வாழும் வரையாடுகள் போன்றவை சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக தத்ரூபமாக பாடம் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்கு போதிய விளம்பரம் இல்லாததால் சுற்றுலா பயணிகளின் வருகை கேர்ன்ஹில் வனப்பகுதியில் குறைவாகவே உள்ளது. இதனால், இங்கு வைக்கப்பட்டுள்ள வனவிலங்குகளின் மாதிரி உருவங்கள் முறையாகப் பராமரிக்கப்படாததால் சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கின்றன. மேலும், வனப்பகுதி நடுவே அமைக்கப்பட்டுள்ள தொங்கு பாலம் கம்பிகள் மற்றும் பாதைக்காக அமைக்கப்பட்டுள்ள பலகைகள் முற்றிலும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால், இங்கு வரும் ஒரு சில சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.



இதேபோல, வனத்துறை அதிகாரியின் அலுவலகமும் போதிய பராமரிப்பின்றி சேதமடைந்த நிலையில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



எனவே கோடை சீசனுக்குள் சுற்றுலாப் பயணிகளுக்கு போதிய விளம்பர செய்து இங்கு வைக்கப்பட்டுள்ள வனவிலங்குகளின் உருவங்கள் மற்றும் தொங்கு பாலத்தை உடனடியாக சீரமைக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேன்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...