தனியார் நூற்பாலையில் தீவிபத்து : பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் நாசம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தனியார் நூற்பாலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்தன.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தனியார் நூற்பாலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்தன.

பல்லடத்தை அடுத்த வெட்டுப்பட்டான் குட்டை பகுதியில் செந்தில்குமார் (58) என்பவருக்கு சொந்தமான அதிநவீன நூற்பாலை இயங்கி வருகிறது. இதில், வடமாநில மற்றும் தென்மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், இன்று தொழிலாளர்கள் பலரும் பணியில் இருந்த போது, ஆலையில் உள்ள இயந்திரத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதனால், தொழிலாளர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறினர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பல்லடம் தீயணைப்புத் துறையினர் தனியார் தண்ணீர் லாரிகள் மூலம் நீரைப் பீய்ச்சிடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான அதிநவீன இயந்திரங்கள் மற்றும் கட்டிடமும் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்திற்கு மின்கசிவு காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...