காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி மீண்டும் மெரீனா போராட்டம்

சென்னை: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி சென்னை மெரீனாவில் இளைஞர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


சென்னை: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி சென்னை மெரீனாவில் இளைஞர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிவடைந்த நிலையில், இதனை பின்பற்ற தவறிய மத்திய அரசு மீது, தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், காவிரி தீர்ப்பு குறித்து தெளிவுபடுத்தக் கோரி மத்திய அரசும் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. இதனிடையே, தமிழகத்திலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 



இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி சென்னை மெரீனாவில் மாணவர்கள் மற்றும் பெண்கள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக, போராட்டம் நடத்துவது போன்ற புகைப்படங்கள் வெளியாகியதால், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்திய அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியிருப்பதைப் போல அந்தப் புகைப்படம் உள்ளது.



ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் பின்னர் சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து இளைஞர்கள் சென்னை மெரினா கடற்கரையில் கூடியுள்ளனர். முன்னதாக, காவிரி மேலாண்மை வாரியத்துக்காக போராட்டம் நடத்த இளைஞர்கள் கூடுவதாகத் தகவல் வெளியானது. அந்தத் தகவலை அடுத்து மெரினா கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...