திருநங்கைகளுக்கு ஆட்டோக்களை வழங்கிய கோவை மாநகர போலீஸ்

கோவை: திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு, 4 திருநங்கைகளுக்கு இலவச ஆட்டோக்களை கோவை மாநகர ஆணையர் பெரியய்யா வழங்கினர்.


கோவை: திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு, 4 திருநங்கைகளுக்கு இலவச ஆட்டோக்களை கோவை மாநகர ஆணையர் பெரியய்யா வழங்கினார்.

ஆண்டுதோறும் மார்ச் 31-ம் தேதி சர்வதேச திருநங்கைகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இந்த தினத்தை முன்னிட்டு கோவை மாநகர போலீசார் மற்றும் தனியார் டிரஸ்ட் இணைந்து திருநங்கைகளுக்கு உதவிகளும், தொழில் வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கோவை சாய்பாபா காலனி பகுதியில் இன்று நடந்த இந்த நிகழ்ச்சியில், கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா திருநங்கைகள் 4 பேருக்கு ஆட்டோக்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டனர்.



பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இது ஓரு முன்னுதாரணமான நிகழ்ச்சி. திருநங்கைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், இந்த நிகழ்ச்சியானது நடத்தப்படுகிறது. காவல்துறையில் மூன்றாம் பாலினத்தவர் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மூன்றாம் பாலினத்தவருக்கு மரியாதையான வேலைகள் வழங்கவும், தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பிச்சை எடுத்தல், பாலியல் தொழில் செய்தல் போன்றவற்றில் ஈடுபடாமல் ஆட்டோ ஓட்டி வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள முடியும். தனியார் நிறுவனங்களும் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பை அளிக்க முன்வரவேண்டும். மூன்றாம் பாலினத்தவர் மீதான சமூகத்தின் பார்வை மாறி வருகிறது", எனத் தெரிவித்தார்.

Newsletter

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...