தூத்துக்குடி மக்களின் குரல் தமிழக அரசுக்குக் கேட்கவில்லை - கமலஹாசன்

தூத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், தூத்துக்குடி மக்களின் குரல் தமிழக அரசுக்குக் கேட்கவில்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமலஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், தூத்துக்குடி மக்களின் குரல் தமிழக அரசுக்குக் கேட்கவில்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமலஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி-மதுரை பைபாஸ் சாலையில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இங்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலையை விரிவாக்க ஸ்டெர்லைட் நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணியை மேற்கொண்டு வந்தன. இதற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

மேலும் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை மனு கொடுத்தனர். இருந்தபோதிலும் அதனைத் தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமலஹாசன் இன்று நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், " மக்கள் உயிரைப் பற்றி கவலைப்படாத எந்த தொழிலும் தேவையில்லை. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தூத்துக்குடி மாவட்ட மக்களின் குரல் தமிழக அரசுக்குக் கேட்கவில்லை. இந்த குற்றத்தை அரசு கண்டிக்கவில்லை என்றால் மக்கள் அதனைச் செய்வார்கள்." என்றார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...