ஈஷா யோகா மையத்தின் ஆதி யோகி சிலை இந்திய சுற்றுலாத் தலமாக அறிவிப்பு

கோவை : ஈஷா யோகா மையத்திலுள்ள ஆதியோகியின் 112-அடி சிலையை, “Incredible India” சுற்றுலாத் தலமாக, இந்திய சுற்றுலா துறை அறிவித்துள்ளது.

கோவை : ஈஷா யோகா மையத்திலுள்ள ஆதியோகியின் 112-அடி சிலையை, “Incredible India” சுற்றுலாத் தலமாக, இந்திய சுற்றுலா துறை அறிவித்துள்ளது.



கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா மையம் அமைந்துள்ளது. அங்குள்ள சிவலிங்க தியான பீடம் மிகவும் பிரசித்திபெற்றது. ஆண்டுதோறும் அங்கு நடைபெறும் மகா சிவராத்திரி நிகழ்வில் நாடு முழுவதும் இருந்தும் பல்வேறு மக்கள் வந்து கலந்து கொள்வார்கள். இந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு மஹாசிவராத்திரியின் போது அங்கு 112-அடி உயரத்தில் ஆதியோகியின் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். 

'காட்டை அழித்து கட்டப்பட்டது தான் இந்த சிலை' என்றும், 'ஜாக்கி வாசுதேவின் உருவமே ஆதியோகி சிலை' என்றும் சிலை தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்தது. 

இந்த நிலையில் ஆதி யோகி சிலை உலகின் மிகப் பெரிய மார்பளவு சிலை என, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. தற்போது, இந்த சிலையை 'Incredible India' சுற்றுலாத் தலமாக, இந்திய சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...