'ஸ்கீம்' என்றால் காவிரி மேலாண்மை வாரியம் இல்லை: அதிர்ச்சி கொடுத்த உச்ச நீதிமன்றம்

டெல்லி: காவிரி தீர்ப்பில் ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம் கிடையாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா விளக்கம் அளித்துள்ளார்.

டெல்லி: காவிரி தீர்ப்பில் ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம் கிடையாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா விளக்கம் அளித்துள்ளார்.

காவரி விவகாரத்தில் கடந்த மாதம் 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில், ஏற்கனவே நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை செயல்படுத்த ‘ஸ்கீம்’ (செயல் திட்டம்) ஒன்றை 6 வாரங்களுக்குள் ஏற்படுத்துமாறு மத்திய அரசுக்கு அப்போது உத்தரவிட்டது.

நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவையும் அமைக்குமாறு கூறி இருந்ததால், உச்ச நீதிமன்றத்து உத்தரவின்படி அந்த இரு அமைப்புகளையும் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் மத்திய அரசை வற்புறுத்தி வந்தன.

ஆனால் கர்நாடக அரசோ, ‘ஸ்கீம்’ ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் உச்ச நீதிமன்றம் கூறி இருக்கிறதே தவிர காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு உத்தரவிடவில்லை என்று கூறி வருகிறது.

இந்த நிலையில், "காவிரி தீர்ப்பில் செயல் திட்டம் தான் குறிப்பிடப்பட்டுள்ளது, மேலாண்மை வாரியம் குறிப்பிடவில்லை. மேலும், ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம் கிடையாது. தமிழகத்திற்கு இது பெரிய பிரச்சினை தான். தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும் ஏப்ரல் 9-ல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்." என்று உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியுள்ளார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...