காவிரி விவகாரம்: கோவையில் பத்திரிக்கையாளர்கள் மனித சங்கிலி போராட்டம்

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதைக் கண்டித்து கோவையில் அனைத்து பத்திரிக்கையாளர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.


கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதைக் கண்டித்து கோவையில் அனைத்து பத்திரிக்கையாளர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

பல்வேறு காரணங்களை கூறி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இந்த நிலையில், "தமிழகத்தின் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படும். மத்திய அரசின் மீது, தமிழக அரசு தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும் 9-ம் தேதி விசாரிக்கப்படும் என்றும் நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்தார்.

மத்திய அரசின் போக்கைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோவையில் தி.மு.க.வினர் ரயில் மறியல், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். விவசாய சங்கத்தின் கோவை மாவட்ட குழுவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.



இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கோவை மாவட்ட அனைத்து பத்திரிக்கையாளர்கள் இன்று கருப்பு சட்டை அணிந்து பணிக்கு வந்து தங்களது கண்டனங்களை வெளிப்படுத்தினர். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். இந்த தொடர் போராட்டங்களால் கோவையின் பல்வேறு இடங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...