எம்.பி. முத்துக்கருப்பனின் ராஜினாமா கடிதம் ஏற்க மறுப்பு..?

டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு காலம் தாழ்த்துவது மன வேதனை அளிப்பதாகக் கூறி அ.தி.மு.க.-வை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் முத்துக்கருப்பன் அவரது பதவியை ராஜினாமா செய்வதாக துணை குடியரசுத் தலைவரிடம் அளித்த கடிதம் நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு காலம் தாழ்த்துவது மன வேதனை அளிப்பதாகக் கூறி அ.தி.மு.க.-வை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் முத்துக்கருப்பன் அவரது பதவியை ராஜினாமா செய்வதாக துணை குடியரசுத் தலைவரிடம் அளித்த கடிதம் நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த அவகாசம் கடந்த 29-ம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால், பல்வேறு காரணங்களை கூறி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. 

இது தமிழக விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் அ.தி.மு.க. ராஜ்யசபா எம்.பி.,யான முத்துக்கருப்பன் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக கடந்த 30-ம் தேதி டெல்லியில் அறிவித்தார். அதன்படி, தனது ராஜினாமா கடிதத்தை இன்று மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவிடம் அளித்தார்.

இந்த சூழலில், முத்துக்கருப்பனின் ராஜினாமா கடிதம் அதற்கான முறையான வடிவத்தில் இல்லை என்றும், இதனால் அவரது ராஜினாமாவை மாநிலங்களவை தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்யா நாயுடு ஏற்க வாய்ப்பில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...