ஏப்ரல் - ஜூன் வரை கடுமையான வெயில் நிலவும் : இந்திய வானிலை மையம்

கோடை காலம் தொடங்கிய நிலையில், ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கடுமையான வெப்பம் இருக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோடை காலம் தொடங்கிய நிலையில், ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கடுமையான வெப்பம் இருக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கிழக்கு, மத்திய கிழக்கு மற்றும் தென் இந்திய பகுதிகளில் குறிப்பாக ஒடிசா, கடலோர ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வழக்கத்தை விட வெப்பம் குறைவாக இருக்கும். ஏனெனில், அங்கு பருவ மழைக்கான காற்று உருவாகும். அதே நேரத்தில், வடக்கு மற்றும் மத்திய மாநிலங்களில் கடந்த ஆண்டுகளை விட வெப்பம் கடுமையாக இருக்கும். 

1901-ம் ஆண்டில் இருந்து ஒப்பிடுகையில், கடந்த 2016-ம் ஆண்டில்தான் வெப்பம் மிக கடுமையாக இருந்தது. இந்தியாவிலேயே ராஜஸ்தான் மாநிலம் பாலோடியில் அதிக அளவாக 123 டிகிரி வெப்பம் பதிவாகி இருந்தது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. மேலும், ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கடுமையான வெப்பம் இருக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...