காவிரி விவகாரம் தொடர்பாக கோவை - திருப்பூரில் பல்வேறு அமைப்பினர் போராட்டம்

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவை மற்றும் திருப்பூரில் தி.மு.க. உள்ளிட்ட சில கட்சிகளும் விவசாய சங்கங்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவை மற்றும் திருப்பூரில் தி.மு.க. உள்ளிட்ட சில கட்சிகளும் விவசாய சங்கங்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று போராட்டம் நடைபெற்றது. அப்போது ஸ்டாலின் உட்பட தி.மு.க. தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் நேற்று தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவையைப் பொறுத்தவரையில் பீளமேடு, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை பீளமேடு பகுதியில் எம்.எல்.ஏ. கார்த்திக் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.



இந்த நிலையில், பீளமேடு பகுதியில் தி.மு.க.வினா் 2 போ் தீக்குளிக்க முயற்சி செய்தனர். மத்திய அரசைக் கண்டித்து தி.மு.க. வட்ட கழக செயலாளர் முருகேசன் மற்றும் சிங்கை சதாசிவம் இருவரும் தற்கொலை முயற்சி செய்தனர். தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.



தி.மு.க. வடக்கு  மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி தலைமையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து வ.உ.சி. மைதானம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.



மேலும், காந்திபுரத்தில் தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு துணைத் தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் மாநில இளைஞரணி துணை செயலாளர் பைந்தமிழ்பாரி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கோவை மாவட்ட குழுவினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூரில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் ஏர்முனை இளைஞர் அணியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் ரயில் நிலையத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அனைவரையும் போலீசார் கைது செய்து வருகின்றனர்.

Newsletter

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...