கோவை விமான நிலையத்தை முற்றுகையிட்டு தி.மு.க.வினர் போராட்டம்

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கோவையில் விமான நிலையத்தை முற்றுகையிட்டு தி.மு.க.வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கோவையில் விமான நிலையத்தை முற்றுகையிட்டு தி.மு.க.வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்த விவகாரத்தில் ஆளும் கட்சியான அ.தி.மு.க.வினர் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் நிலையில், தி.மு.க மற்றும் இதர கட்சிகளும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். கோவையைப் பொறுத்தவரையில், பல்வேறு கடைகள் மற்றும் மருந்தகங்கள் அடைக்கப்பட்டுள்ளன. காந்திபுரம் பகுதியில் அமைச்சர் வேலுமணி தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. 



இந்த நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ. கார்த்திக் தலைமையில் அக்கட்சித் தொண்டர்கள் இன்று காலை கோவை விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார். நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த போராட்டத்தில் தோழமைக் கட்சியான ம.தி.மு.க.வும் பங்கேற்றது. 

இந்த போராட்டத்தின் போது போலீசாருடன் தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...