கோவையில் வரும் 5-ம் தேதி தொழிற்சங்கங்கள் நான்கு இடங்களில் மறியல் போராட்டம்

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவையில் வரும் 5-ம் தேதி நான்கு இடங்களில் மறியல் போராட்டம் நடத்துவதென அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவையில் வரும் 5-ம் தேதி நான்கு இடங்களில் மறியல் போராட்டம் நடத்துவதென அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழக முழுவதும் எதிர்க்கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், காட்டூர் ஏ.ஐ.டி.யு.சி அலுவலகத்தில் சி.ஐ.டி.யூ மாநில துணைத் தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற தொழிற்சங்க கூட்டத்தில் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., எல்.பி.எப்., மற்றும் எம்.எல்.எப்., உள்ளிட்ட மத்திய தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். 

அப்போது, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சனையான காவிரி விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் மத்திய அரசைக் கண்டித்து வரும் 5-ம் தேதி கோவையில் உள்ள மத்திய அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிடுவது பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பெரிய நாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடுவது எனக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...