அதிகரட்டி பேரூராட்சி தொழிற்சங்கத் தேர்தலை புறக்கணித்த தேயிலை விவசாய உறுப்பினர்கள்

நீலகிரி : நீலகிரி மாவட்டம் அதிகரட்டி பேரூராட்சி தொழிற்சங்கத் தேர்தலை, தேயிலை விவசாய உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் அதிகரட்டி பேரூராட்சி தொழிற்சங்கத் தேர்தலை, தேயிலை விவசாய உறுப்பினர்கள் புறக்கணித்தனர். 



நீலகிரி மாவட்டத்தில் அரசு சார்பில் 18 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட தேயிலை விவசாயிகள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். சுமார் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட அதிகரட்டி பேரூராட்சி தொழிற்சாலை சங்கத் தேர்தலில் ஆளும் கட்சியின் தலையீட்டால், தேர்தல் முறையாக நடைபெறவில்லை என தேயிலை விவசாய உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 



இதைத் தொடர்ந்து, உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட தலைவரை நீக்கி விட்டு, தன்னிச்சையாக ஆளுங்கட்சியினருக்கு தேவையான ஆட்களைத் தேர்வு செய்து பெயர் பலகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதைக் கண்டித்து இன்று அவர்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு சுமூகமான தீர்வை ஏற்படுத்த வேண்டும் என தேயிலை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...