போராட்ட உணர்வுகளை மதிக்கிறோம்..! ரயிலை நிறுத்த வேண்டாம்..!

ரயில்வே நிர்வாகம் போராட்டங்களுக்கு பின் உள்ள உணர்வுகளை முழுமையாக மதிப்பதாகவும், போராட்டக்காரர்கள் ரயிலை நிறுத்த வேண்டாம் என சேலம் ரயில்வே கோட்டம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ரயில்வே நிர்வாகம் போராட்டங்களுக்கு பின் உள்ள உணர்வுகளை முழுமையாக மதிப்பதாகவும், போராட்டக்காரர்கள் ரயிலை நிறுத்த வேண்டாம் என சேலம் ரயில்வே கோட்டம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகப் பல போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் ரயில்நிலையங்களில் உள்ளே நுழைந்து ரயில்களை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இதனால், லட்சக்கணக்கான பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். 

இந்த நிலையில், ரயில்நிலையங்களில் போராட்டம் நடத்துபவர்களுக்கு சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "போராட்டங்களின் போது ரயில் நிலையங்களில் உள் நுழைந்து ரயில்களை நிறுத்த வேண்டாம். ரயில்வே நிர்வாகம் போராட்டங்களுக்கு பின் உள்ள உணர்வுகளை முழுமையாக மதிக்கிறது. ரயில் பயணிகள், முக்கியமாக வயதான முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டோர் இதனால் பெரும் அவதிக்கு உள்ளாவதுடன், சில நேரங்களில் அவர்களுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நிலை கூட ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, போராட்டங்களின் போது ரயில் நிலையங்களின் உள் வந்து ரயில்களை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டாம். ரயில்வே நிர்வாகம் தனது பணியை செவ்வனே செய்ய ஒத்துழைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது," என தெரிவித்துள்ளார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...