கோவை - சென்னை இடையே இரண்டடுக்கு சிறப்பு கட்டண ரயில் அறிவிப்பு

கோவை : கோவை - சென்னை இடையே ஒருவழிப் பயணமாக இரண்டடுக்கு சிறப்பு கட்டண ரயில் வரும் 06-ம் தேதி இயக்கப்படுகிறது.

கோவை : கோவை - சென்னை இடையே ஒருவழிப் பயணமாக இரண்டடுக்கு சிறப்பு கட்டண ரயில் வரும் 06-ம் தேதி இயக்கப்படுகிறது. 



இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வரும் 06-ம் தேதி (ரயில் எண்: 06075) சென்னை சென்ட்ரல் - கோவை சிறப்பு கட்டண ரயில், உதய் இரண்டடுக்கு பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. ஒருவழிப் பயணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 02.45 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், இரவு 10.40 மணிக்கு கோவை வந்தடையும்.

இதில், 8 குளிரூட்டப்பட்ட இரண்டடுக்கு பெட்டிகளில், 3 பேண்ட்ரி வசதியுடன் கூடியதாகும். பேண்ட்ரி வசதி கூடிய பெட்டிகளில் தலா 104 பயணிகளும், எஞ்சிய ஐந்து பெட்டிகளில் தலா 120 பயணிகளும் செல்லும் வசதி பெற்றுள்ளது. 

இந்தச் சிறப்பு ரயிலானது, அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய நிறுத்தங்களில் நிறுத்தப்படும். இந்த ரயிலுக்கான முன்பதிவு 5-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...