கோவை - பாலக்காடு இடையிலான ரயில் சேவையில் மாற்றம்

கோவை: பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை- பாலக்காடு இடையிலான ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவை: பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை- பாலக்காடு இடையிலான ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவை மாவட்டத்தில் இருந்து கேரளா வழியாக பல்வேறு மாநிலங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பாலக்காடு எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தண்டவாளத்தில் ஆண்டுப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், கோவை - பாலக்காடு மார்க்கமாக இயக்கப்படும் ஒரு சில ரயில்களின் சேவை வரும் 8-ம் தேதி முதல் வரும் ஜுன் 11-ம் தேதி வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

சொர்னூர் ரயில் நிலையத்தில் இருந்து நாள்தோறும் காலை 8 மணிக்குப் புறப்படுவதாக இருந்த (ரயில் எண் : 56604) சொரனூர் - கோவை பயணிகள் ரயில், 8-ம் தேதி முதல் ஜுன் 11-ம் தேதி வரை காலை 09.30 மணிக்கு கிளம்பும் (வெள்ளிக்கிழமைகளை தவிர்த்து).

இதேபோல, ஏப்., 06, 13, 20, 27 மற்றும் மே 4, 11, 18 ஆகிய (வெள்ளிக்கிழமை) நாட்களில் சொர்னூர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் (ரயில் எண் : 56604) சொர்னூர் - கோவை பயணிகள் ரயில், 20 நிமிடங்கள் கஞ்சிக்கோட்டில் நிறுத்தப்படும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...