வனப்பகுதிகளை ஒட்டியுள்ள விவசாய நிலங்களைப் பாதுகாக்கும் 'அகழி' திட்டம்

கோவை: கோவை வனச்சரகத்திற்குட்பட்ட விவசாய நிலங்களில் யானைகள் புகுந்து சேதப்படுத்துவதைத் தடுக்கும் வகையில், அகழிகள் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கோவை: கோவை வனச்சரகத்திற்குட்பட்ட விவசாய நிலங்களில் யானைகள் புகுந்து சேதப்படுத்துவதைத் தடுக்கும் வகையில், அகழிகள் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட பாலமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. அவ்வப்போது, விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் ஊடுருவாமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 

இந்த நிலையில், தமிழ்நாடு பல்லுயிர் பெருக்கம் திட்டத்தின் கீழ் பெரியநாயக்கன் பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட விவசாய நிலங்களைச் சுற்றி அகழிகள் அமைக்கும் திட்டம் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 1,000 குடும்பங்கள் பயன்பெற இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். 

"இந்தத் திட்டத்தின் கீழ் வனச்சரகத்திற்குட்பட்ட கிராமப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களை சுற்றியும் அகழி அமைக்கப்படுகின்றன. இதுவரை 8 கி.மீ. தொலைவிற்கு அகழி அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது," என வனத்துறை அதிகாரி சி. பழனிராஜா கூறினார். 

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...