வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த வழக்கு : உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 10-ம் தேதி போராட்டம்

கோவை: வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்ற அளித்த தீர்ப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 10-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மேம்படுத்தும் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

கோவை: வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்ற அளித்த தீர்ப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 10-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மேம்படுத்தும் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

கோவையில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மேம்படுத்துவதற்கான கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஆதி தமிழர் கட்சி தலைவர் வெண்மணி பேசுகையில், "சமீபத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கோயல் மற்றும் லலித் தலைமையிலான அமர்வு வழங்கி உள்ள தீர்ப்பு சாதிய வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காமல் செய்யும் வகையில் அமைந்துள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டுகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் எஸ்.சி., எஸ்.டி., மக்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. 

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் முறையாக வழக்குகள் பதியப்படுவது இல்லை. அவ்வாறு பதிவு செய்யப்பட்டாலும் விரைவில் நீதி கிடைப்பதில்லை. இந்நிலையில், தற்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கி உள்ள தீர்ப்பால், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் அடிப்படை நோக்கத்தைப் புறக்கணிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும், பா.ஜ.க., இந்துத்துவ கொள்கை கொண்ட இந்த நீதிபதிகள் வேண்டும் என்றே தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிராக இவ்வாறு தீர்ப்பு கொண்டு வந்து இருக்காலாம். இந்தத் தீர்ப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மறுசீராய்வு மனுவில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அமையாவிட்டால் ஏப்.,10-ல் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும்," எனத் தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...