அத்திக்கடவு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி கிராம மக்கள் தீர்த்தக்குட யாத்திரை வழிபாடு

கோவை : அத்திக்கடவு - அவினாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி கிராமமக்கள் சார்பில் மேட்டுப்பாளையம் பவானியாற்று நீரை எடுத்து தீர்த்தக்குட யாத்திரை வழிபாடு நடத்தப்பட்டது.

கோவை : அத்திக்கடவு - அவினாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி கிராமமக்கள் சார்பில் மேட்டுப்பாளையம் பவானியாற்று நீரை எடுத்து தீர்த்தக்குட யாத்திரை வழிபாடு நடத்தப்பட்டது. 

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் ஓடும் பவானி ஆற்றில் இருந்து மழைக்காலங்களில் சேரும் உபரி நீரை திருப்பி கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் வறட்சியான கிராமங்களில் உள்ள குளம் குட்டைகளை நிரப்பும் திட்டமே அத்திக்கடவு - அவினாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டமாகும். நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள், சிறு நகரங்கள் பெரிதும் பயன்பெறும் இத்திட்டத்தை நிறைவேற்றப் பல ஆண்டுகளாக பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது இத்திட்டத்திற்கான முதற்கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் போராட்டக்குழு சார்பில் சித்திரை முதல் தேதியன்று மேட்டுப்பாளையத்தில் ஓடும் பவானியாற்றில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட குடங்களில் நீர் எடுத்து இங்குள்ள வனபத்திர காளியம்மன் கோவிலில் வைத்து வழிபாடு செய்யப்படுவது வழக்கம். பின்னர் இத்தீர்த்த குடங்களோடு தங்களது கிராமங்களுக்கு சென்று அங்குள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகளை செய்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக சித்திரை முதல் தேதியான இன்றும் அன்னூர், வடவள்ளி, குப்பேபாளையம், பிள்ளையப்பம்பாளையம், தெக்கலூர், நம்பியாம்பாளையம் உள்ளிட்ட பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட தீர்த்த குடங்களில் பவானியாற்று நீரை சேகரித்து ஆற்றங்கரையில் உள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் வழிபாடு நடத்தினர். பின்னர், இக்குடங்களை தங்களது ஊர்களுக்கு யாத்திரையாக எடுத்து சென்று கிராம கோவில்களில் உச்சிகால பூஜைகள் நடத்தினர். 

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...