தமிழகத்திற்கு எதிராக பேசிவரும் எச். ராஜா தேசவிரோதி : சி.பி.ஐ.எம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன்

திருப்பூர் : தமிழகத்திற்கு எதிராக பேசிவரும் பா.ஜ.க.,வின் எச். ராஜாதான் தேசவிரோதி என திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர் : தமிழகத்திற்கு எதிராக பேசிவரும் பா.ஜ.க.,வின் எச். ராஜாதான் தேசவிரோதி என திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் 127-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக திருப்பூர் காமராஜ் சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "அம்பேத்கரின் 127-வது பிறந்தநாள் கொண்டாடி வரும் வேளையில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கான எஸ்.சி எஸ்.டி வன்கொடுமை சட்ட வழக்கில் திருத்தம் மேற்கொள்வது வருத்தமளிக்கிறது. இந்த நடவடிக்கையைக் கண்டித்து வரும் 25-ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். 



காவிரி விவகாரத்தில் போராடும் அனைவரும் தேசவிரோதிதான் எனக் கூறிய எச். ராஜாதான் தேசவிரோதி. தொடர்ந்து, தமிழகத்திற்கு எதிராகப் பேசி வருகிறார். இவ்வாறு பேசியும் தமிழகத்தில் சகஜமாக நடமாட விட்டிருக்கும் அளவுக்கு தமிழர்கள் சகிப்புத்தன்மையோடு இருக்கிறார்கள். காவிரி பிரச்சினைக்காகப் போராடுவதன் காரணமாக, நாங்கள் தேசவிரோதிகள் என்றால் அப்படியே இருந்துவிட்டு போகிறோம். அ.தி.மு.க.,தான் சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறது. அ.தி.மு.க., அரசால் காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் பிரதமரை சந்திக்க நேரம் கூட பெற முடியவில்லை.



காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் எந்த ஆக்கப்பூர்வ நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் மத்திய அரசின் பிரதிநிதியான ஆளுநரிடம் மனு கொடுத்துள்ளோம். பிரதமருக்கு கருப்பு கொடி காட்டியதை தவிர்த்திருக்கலாம் என ஆளுநரும் தெரிவித்தார். ஆனால், கருப்புக்கொடி காட்ட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானோம் என தெரிவித்தோம். மேலும், நாங்கள் ஐ.பி.எல்., விளையாட்டுக்கு எதிரானவர்கள் அல்ல. தமிழகம் போராட்டக்களமாக இருக்கும் நிலையில், அதனை சில நாட்கள் சென்னையில் நடத்த வேண்டாம் என்றே கோரிக்கை வைத்தோம். காவிரி விவகாரத்தில் உயர் அதிகாரம் படைத்த காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை போராடுவோம். அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்து 16 ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆலோசித்து அறிவிக்கப்படும்." என்றார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணா  சிலை முன்பு புரட்சியாளர் அம்பேத்கரின் 127வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு நகர மற்றும் ஒன்றிய பகுதிகளான அண்ணாசிலை அருகில்,பேருந்து நிலையம், ஐந்துமுக்கு, நஞ்சியம்பாளையம் உள்ளிட்ட 13 இடங்களில் விடுதலை சிறுத்தையின் கொடி ஏற்றி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



இதேபோல, நீலகிரி மாவட்டம் உதகை மலை ரயில் நிலையத்தில் அம்பேத்கரின் 127-வது பிறந்த நாளை முன்னிட்டு, உதகை மலை ரயில் நிலையத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. 



இந்த நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்ட தாட்கோ மேலாளர் தி. ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, உதகை மலை ரயில் பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். 

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...