எடப்பாடி அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் : ஜவஹிருல்லா

கோவை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ஆயுள்தண்டனை கைதியை ஜாமினில் விட மறுக்கும் தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

கோவை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ஆயுள்தண்டனை கைதியை ஜாமினில் விட மறுக்கும் தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். 

கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு அளிக்க வந்த மனித அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசியதாவது :- எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் நீண்ட காலமாக சிறையில் இருப்பவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில், இதுவரை யாரையும் தமிழக அரசு விடுவிக்கவில்லை. கோவை சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளில் இதுவரை 4 ஆயுள் தண்டனை கைதிகள் உயிரிழந்துள்ளனர். கோவை சிறையில் இரு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டுள்ள அபிதாகீருக்கு நிரந்தரமாக பரோல் கொடுக்க வேண்டும் அல்லது அவரை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அபுதாகீரை தமிழக அரசு வெளியே விடாமல் இருப்பது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். ஒரு மாத பாரோலுக்கு பின்னர் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. சிறை கைதி அபுதாகீருக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு எடப்பாடி பழனிசாமி அரசுதான் பொறுப்பாகும். மேலும், சட்ட ஆலோசனைப் பெற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம்.காஷ்மீர் சிறுமி படுகொலையில் சங்பரிவார் அமைப்பினர் மற்றும் பா.ஜ.க.,வினர் ஈடுபட்டுள்ளனர். அதேபோல, உத்தரபிரதேசத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரத்திலும் பா.ஜ.க.,வினர் ஈடுபட்டுள்ளனர். இது இந்தியாவிற்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரு சம்பவங்களைக் கண்டித்து மனித நேய மக்கள் கட்சி சார்பில் நாளை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடத்தப்படும், எனத் தெரிவித்தார்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...