கோவையில் 33-வது அரசு பொருட்காட்சி தொடக்கம்

கோவை: கோவை சிறைச்சாலை காவலர் அணிவகுப்பு மைதானத்தில் 33-வது அரசு பொருட்காட்சியினை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று தொடங்கி வைத்தார்.

கோவை: கோவை சிறைச்சாலை காவலர் அணிவகுப்பு மைதானத்தில் 33-வது அரசு பொருட்காட்சியினை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று தொடங்கி வைத்தார்.

கோவை மாவட்டம், மத்திய சிறைச்சாலை காவலர் அணிவகுப்பு மைதானத்தில் நேற்று செய்தி மக்கள் தொடர்புத் துறையால் நடத்தப்படும் அரசுப் பொருட்காட்சி தொடக்கவிழா மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமிழக சட்டப்பேரவைத் துணை தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆகியோர் முன்னிலையில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.



இவ்விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், "முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையிலான அரசு, கோயம்புத்தூர் மாவட்ட மக்களின் நலனை முன்னிட்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில், அத்திக்கடவு-அவினாசி திட்டம், மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவான மெட்ரோ இரயில் திட்டம், ‘ஸ்மார்ட் சிட்டி” திட்டம், லட்சுமி மில்ஸ் முதல் சின்னியம்பாளையம் வரை உயர் மட்ட மேம்பாலம் என பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது.



தமிழக அரசின் திட்டங்களை மக்கள் அனைவரும் அறிந்து கொள்ள அரசுப் பொருட்காட்சி உதவிகரமாக உள்ளது. 45 நாட்கள் நடைபெறும் இந்த பொருட்காட்சியில் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு நாடகங்களும், நலிந்த கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகளும் நாள்தோறும் நடைபெறவுள்ளன. எனவே மக்கள் அனைவரும் குடும்பத்துடன் வருகை தந்து இந்த பொருட்காட்சியை கண்டுகளித்து அரசின் திட்டங்களையும் சாதனைகளையும் அறிந்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்." என்றார்.



அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசுகையில், "கோவையில் தமிழகத்தின் 192-வதும், கோயம்புத்தூரின் 33-வதுமான அரசுப் பொருட்காட்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் செய்தி மக்கள் தெர்டர்புத் துறையின் மூலம் 10 மாவட்டங்களில் அரசுப் பொருட்காட்சியானது நடைபெறுகின்றது. அதில் அரசுக்கு அதிக வருவாயை ஈட்டித்தருவது கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் பொருட்காட்சியாகும்.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன், இயக்குநர் (பொருட்காட்சிகள்) பொ.சங்கர், மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

Dengue Cases Declining in Coimbatore, Prevention Measures Intensified: Minister Arunraj

Health Minister K.G. Arunraj said dengue cases in Coimbatore have declined compared to last year, with preventive measur...

முதல்வர் விஜய்யின் பேச்சை கண்டித்து கோவையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

முதல்வர் விஜய்யின் சட்டப்பேரவை பேச்சைக் கண்டித்து, செப். 12-ம் தேதி ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் செஞ்சிலுவை ச...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 புதிய மாணவர்களுக்கான வரவேற்பு விழா

கோவை ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 27-வது Batch முதலாமாண்டு மாணவர்களுக்கான YUVA 2026 Freshmen...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தினம் கொண்டாட்டம்

துடியலூர் அருகே வட்டமலை பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தினம் சிறப்பாக கடைப்பிடிக்க...

கோவை நீதிமன்ற வளாகத்தில் கைகலப்பு; போலீசார் விசாரணை

கோவை நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞரின் காரின் நான்கு டயர்களிலும் காற்றை இறக்கியதாக கூறப்படும் விவகாரத...

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...