மாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய பெண் பேராசிரியர் கைது : பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் கலைக் கல்லூரியில் மாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய பெண் பேராசிரியர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் கலைக் கல்லூரியில் மாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய பெண் பேராசிரியர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.



அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியையாகப் பணியாற்றி வருபவர் நிர்மலாதேவி. இவர், தன்னிடம் படிக்கும் மாணவிகளைப் பல்கலைக்கழகப் பெயரைக் கூறி பாலியலுக்கு வற்புறுத்திய ஒலிப்பதிவு ஒன்று அண்மையில் வெளியானது. இது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் குறிப்பிட்ட பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கல்லூரி நிர்வாகத்திலும் மாணவிகள் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, பேராசிரியரைக் கைது செய்யக் கோரி மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். 

இதனிடையே, மாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்தியதாக எழுந்த புகாரையடுத்து, பெண் பேராசிரியர் நிர்மலாதேவி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து, அக்கல்லூரியின் செயலர் ராமசாமி அளித்த பேட்டியில், ‘‘பாலியல் வற்புறுத்தல் குறித்து கல்லூரி மாணவிகள் புகார் அளித்தனர். 

இது குறித்து 3 மூத்த பேராசிரியர்களைக் கொண்டு விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு கூறினேன். அவர்களும் அறிக்கை அளித்தார்கள். அதன்பின் பேராசிரியை நிர்மலாதேவி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குற்றச்சாட்டு குறித்து அவர் பதில் அளித்தபின் விசாரணை ஆணைக்குழு அமைக்கப்படும். அதன்பின் சட்டப்பூர்வமான நடவடிக்கை தொடரும். குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ, மாணவிகளின் நலன் கண்டிப்பாக பாதுகாக்கப்படும்’’ என்று கல்லூரியின் செயலர் தெரிவித்தார்.

மாணவ, மாணவிகளுக்கு குருவாக இருக்க வேண்டிய பேராசிரியை நிர்மலாதேவி பாலியல் புரோக்கராக மாறி போனில் பேசிய ஆடியோ பேச்சு வாட்ஸ்-அப்பில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணி குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி, நிர்மலாதேவியின் பின்னணியில் இருக்கும் பல்கலைக்கழக அதிகாரிகள் யார்-யார்..? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட உள்ளது. இது தொடர்பாக பேராசிரியை நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பின்னரே மாணவிகளை ஆசைக்கு இணங்க சம்மதிக்க வைக்குமாறு நிர்மலா தேவியிடம் அறிவுறுத்தியது யார்-யார்..? என்பது தெரியவரும். அப்போது அவர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.‘

இந்த நிலையில், கல்லூரி நிர்வாகம் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டதை அடுத்து, நிர்மலா தேவி மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக விருதுநகர் மாவட்ட ஏ.டி.எஸ்.பி மதி தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். 

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...