கோவையில் நடக்கும் சட்டவிரோத செயல்கள் குறித்து புகார் அளிக்க செல்போன் எண் அறிமுகம்

கோவை மாவட்டத்தில் நடக்கும் சட்டவிரோத செயல்களை தடுக்கும் வகையில், அது தொடர்பான புகார் அளிக்க செல்போன் எண்ணை கோவை மாவட்ட சிறப்பு பிரிவு போலீசார் வெளியிட்டுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் நடக்கும் சட்டவிரோத செயல்களை தடுக்கும் வகையில், அது தொடர்பான புகார் அளிக்க செல்போன் எண்ணை கோவை மாவட்ட சிறப்பு பிரிவு போலீசார் வெளியிட்டுள்ளனர்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பு சரக பகுதிகளில் கடந்த சில நாட்களாக சட்டவிரோத சம்பவங்கள் நடைபெறுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் நொய்யல் ஆற்றில் இருந்து மணல் அள்ளி வரும் போது சமூக ஆர்வலர்கள் லாரியைப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல, பேரூர் பகுதிகளில் சுமார் 4 மாதங்களுக்கு முன்பு தடை செய்யப்பட்ட 3ஆம் நம்பர் லாட்டரிகள் செயல்படுவதாகவும் செய்திகளில் வெளியானது. மேலும், மது விற்பனையும் சட்டவிரோதமாக விற்பனை செய்வதும் அதிகரித்துள்ளது. இந்த சட்டவிரோத சம்பவங்கள் குறித்து கோவை மாவட்ட சிறப்பு பிரிவினர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளனர்.



அதில் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்ட காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சில பகுதிகளில் ஆன்லைன் லாட்டரி, போலி மது விற்பனை, மணல் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக செய்திகளில் வெளிவருகிறது. ஆகவே, சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதில், குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறும் காவலர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, கோவை புறநகர் மாவட்ட பொதுமக்கள் சட்ட விரோத செயல்கள் குறித்த அறிந்தால், 94458-46282 என்ற எண்ணிற்கு அழைத்து தகவல்களை அளிக்கலாம். இதில் தகவல் தருபவர்கள் பற்றிய விவரங்கள் ஏதும் தர வேண்டியது இல்லை, இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...