குழாய் உடைப்பால் வீணாகிய குடிநீர் : தகவல் கொடுத்தும் அலட்சியம் காட்டிய அதிகாரிகள்

திருப்பூர் : திருப்பூரில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாமதம் காட்டியது பொதுமக்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.

திருப்பூர் : திருப்பூரில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாமதம் காட்டியது பொதுமக்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. 



திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் இரண்டாம் திட்ட குடிநீர் மேட்டுப்பாளையத்திலிருந்து குழாய் வழியாக கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. திருமுருகன்பூண்டி பகுதியில் இத்திட்டக் குடிநீர் வரும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வெளியேறி சாக்கடையில் கலந்து வீணாகியது. 

இது தொடர்பாக பொதுமக்கள் புகார் அளித்தும், உரிய அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு வந்து குழாய் உடைப்பை சரிசெய்வதில் தாமதம் காட்டினர். இதனால், சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக குடிநீர் வீணாக சாக்கடையில் கலந்தது. 

கோடைக் காலத்தில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வரும் வேளையில், நீரை சேமிக்க அதிகாரிகள் அலட்சியம் காட்டுவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...