நொய்யலில் மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட மூன்று வாகனங்கள் பறிமுதல்

கோவை: நொய்யல் ஆற்றுப்படுகையில் மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட மூன்று வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோவை: நொய்யல் ஆற்றுப்படுகையில் மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட மூன்று வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நொய்யல் ஆற்றுப்படுகையில் சட்ட விரோதமாக மணல் அள்ளும் வீடியோ காட்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகியது. அந்த வீடியோ-வில் காவல்துறை மற்றும் வருவாய்த் துறைக்கு லஞ்சம் கொடுத்து தான் மணல் அள்ளுவதாக சிலர் பேசும் காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியது.

நொய்யலில் சட்ட விரோதமாக மணல் அள்ளினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். அதனைத் தொடர்ந்து, விதி மீறி நொய்யலில் மணல் அள்ளுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.



இந்த நிலையில், நேற்று ஆற்றுப்படுகையில் இருந்து சட்ட விரோதமாக மணல் ஏற்றி வந்த மினி லாரி ஒன்றையும் அதன் பின் வந்த இருசக்கர வாகனத்தையும் நரசிபுரம் அருகே போலீசார் மடக்கிப் பிடித்தனர். மேலும், காருண்யா நகர் பகுதியில் மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டியையும் போலீசார் பிடித்தனர். ஆனால், அந்த வாகனங்களில் வந்த நபர்கள் தப்பியோடியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.



தப்பியோடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...