பிளாக்தாண்டர் தீம் பார்க்கிற்கு தேசிய விருது

கோவை: மேட்டுப்பாளையம் பிளாக்தாண்டர் தீம் பார்க்கிற்கு சிறந்த நீர்சறுக்கு மற்றும் பொழுபோக்கிற்கான தேசிய மற்றும் மாநில விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.


கோவை: மேட்டுப்பாளையம் பிளாக்தாண்டர் தீம் பார்க்கிற்கு சிறந்த நீர்சறுக்கு மற்றும் பொழுபோக்கிற்கான தேசிய மற்றும் மாநில விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், ஊட்டி சாலையில் உள்ள பிளாக்தாண்டர் பொழுதுபோக்கு பூங்கா கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு நீர் சருக்கு உள்ளிட்ட நீர் சம்பந்தமான பல்வேறு பொழுதுபோக்கு விளையாட்டுக்கள் இடம் பெற்றிருப்பதால், தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் குழந்தைகளுடன் ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர்.

மேலும், ஆண்டுதோறும் வனத்தின் அவசியத்தையும் குழந்தைகளிடம் அச்ச உணர்வைப் போக்கும் வகையில் வானில் பலூனில் பறக்கும் சாகச நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த தீம் பார்க்கில் சிறந்த  முறையில் உரிய பாதுகாப்புடன் நடைபெற்று வருவதைப் பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக சிறந்த நீர் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கிற்கான தேசிய விருது மேட்டுப்பாளையம் பிளாக்தாண்டர் தீம் பார்க்கிற்கு வழங்கப்பட்டுள்ளது.



மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருது பிளாக்தாண்டர் தீம் பார்க்கின் செயல் இயக்குநர் வின்சென்ட் அடைக்கலராஜ் அவர்களிடம் வழங்கப்பட்டது. மேலும், மிகச்சிறந்த நீர் விளையாட்டு பூங்காவிற்கான மாநில அரசின் விருதும் அளிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...