நீதிபதி லோயா மரணத்தில் சிறப்பு புலனாய்வு விசாரணை தேவையில்லை - உச்சநீதிமன்றம்

டெல்லி: நீதிபதி லோயா மர்ம மரணத்தை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட முடியாது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

டெல்லி: நீதிபதி லோயா மர்ம மரணத்தை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட முடியாது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் கடந்த 2005-ம் ஆண்டு நரேந்திர மோடி முதல்வராக இருந்த போது, அங்கு உள்துறை அமைச்சராக அமித்ஷா பதவி வகித்து இருந்தார். அப்போது, ஆட்கடத்தல், ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட விவகாரங்களில் குஜராத் போலீசாரால் கைது செய்யப்பட்ட சொராபுதீன் அன்வர் ஹுசைன் சேக் என்பவர் அகமதாபாத்திற்கு அருகில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த போலி என்கவுண்டர் வழக்கு குஜராத் மாநிலத்தில் விசாரிக்கப்படாமல், மகாராஷ்டிரா மாநிலத்தில் விசாரிக்கப்பட்டது. ஷராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்த சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி பிரிஜ் கோபால் ஹர்கிஷன் லோயா கடந்த 2014-ம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இந்நிலையில், நீதிபதி லோயா மர்ம மரணம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர்களால் மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று வந்த அந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், "நீதிபதி லோயா மரண வழக்கு நீதித்துறைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு வணிக மற்றும் அரசியல் நோக்கத்தோடு தொடரப்பட்டுள்ளது." எனக் கூறி இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...