தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வினை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

திருப்பூர் : திருப்பூரில் தனியார் பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் திடீர் ஆய்வு நடத்தியதை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி நேரில் பார்வையிட்டார்.

திருப்பூர் : திருப்பூரில் தனியார் பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் திடீர் ஆய்வு நடத்தியதை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி நேரில் பார்வையிட்டார்.



திருப்பூர் மாவட்டம் முழுவதும் தனியார் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டதையடுத்து, பள்ளி வாகனங்கள் இன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதற்காக, திருப்பூர் தெற்கு, வடக்கு மற்றும் அவிநாசி ஆகிய பகுதிகளில் இருந்து 140 பள்ளிகளைச் சேர்ந்த 661 பேருந்துகள் சோதனைக்காக வந்திருந்தன. இதில், பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு வசதிகள், முதலுதவி உபகரணங்கள், தீயணைப்பு கருவிகள், அவசரகால வழி ஆகியவை சோதனை செய்யப்பட்டன. அவற்றில் குறைபாடுகள் உள்ள பேருந்துகள் திருப்பி அனுப்பப்பட்டன. 



இந்த ஆய்வினை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி நேரில் பார்வையிட்டார். பள்ளி வாகனங்களைக் கவனமாக இயக்கவும், ஓட்டுநர்கள் உறுதி மொழி எடுத்தனர். மேலும், காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் ஆய்வினை பார்வையிட வருவதாக சொல்லியிருந்த நிலையில், 11 மணிக்கு மேல் ஆட்சியர் வந்ததால் தனியார் பள்ளி வாகன ஓட்டுநர்கள் வெயிலில் அதிக நேரம் காத்திருந்து அவதிக்குள்ளாகினர்.

Newsletter

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...