பொருளாதார ரீதியாக பின்தங்கிய தடகள வீரர்களை ஊக்குவிக்கும் ஸ்போர்டிவ் நிறுவனம்

கோவை: பொருளாதார ரீதியாக பின்தங்கிய 30 தடகள வீரர்களுக்கு இலவசமாகக் காலணிகளை கொடுத்து கோவையைச் சேர்ந்த ஸ்போர்டிவ் நிறுவனம் வழங்கி ஊக்குவித்தது

கோவை: பொருளாதார ரீதியாக பின்தங்கிய 30 தடகள வீரர்களுக்கு இலவசமாகக் காலணிகளை கொடுத்து கோவையைச் சேர்ந்த ஸ்போர்டிவ் நிறுவனம் வழங்கி ஊக்குவித்தது. 

கோவையை தலைமையிடமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள ஸ்போர்டிவ் நிறுவனம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய தடகள வீரர்களைக் கண்டறிந்து, அவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.முதற்கட்டமாக, கோவையில் பயிலும் பல்வேறு கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் 30 பேருக்கு காலணிகளை இன்று வழங்கியது. நேரு உள்விளையாட்டு அரங்கில் மாணவ, மாணவியருக்கு காலணிகளை ஸ்போர்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா துரோனாசாரியா விருது பெற்ற ரமேஷ் வழங்கினார். 

அப்போது, அவர் கூறும் போது :- சிறந்த வீரர்கள் ஆரம்பத்தில் அடையாளம் கிடைக்கப் பெறாமல் அவதிப்படுகின்றனர். வெற்றிக்குப் பிறகு வரும் புகழ் மற்றும் பணம் கஷ்டப்படும் போது கிடைக்கப் பெறுவதில்லை. மேலும், இம்மாதிரியான முயற்சிகளின் மூலம் திறன் வாய்ந்த வீரர்களை கண்டறியப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்வதன் மூலம் சிறந்த வீரர்களை உருவாக்க முடியும், எனக் கூறினார். 



இதன் பின்னர் ஸ்போர்டிவ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி கீதா கூறுகையில், "இது தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை முன்னேற்றுவிக்க எடுக்கப்பட்ட முதல் முயற்சியாகும். ஒவ்வொருவரின் விளையாட்டு விபர குறிப்புகள், செயல்திறன் கண்காணிப்பு, மேலாண்மை மற்றும் அவர்களுக்கு தேவையான ஸ்பான்சர்ஷிப் ஆகியன பொருளாதார ரீதியாக பின்தங்கிய தடகள வீரர்களுக்கு கிடைக்கப் பெற வேண்டும். ஆயிரம் மைல் பயணம் ஒரு ஜோடி காலணியில் துவங்குகிறது. சிறந்த விளையாட்டு திறமை ஒருபோதும் கவனிக்கப்படாமல் இருந்து விடக்கூடாது," என்றார். 

இந்நிகழ்ச்சியில், கர்நாடக தடகள சங்க செயலாளர் ராஜவேலு, கோவை தடகள சங்கத் துணைச் செயலாளர் நிஜாமுதீன் உள்ளிடோர் பங்கேற்றனர். திறன் வாய்ந்த வீரர்கள் ஊக்குவிப்பது நல்ல விஷயம், ஆனால் சரியான நபர்களுக்கு அது சென்றடைய வேண்டும் என்பதே விளையாட்டு ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...