அறுவடைக்கு தயாரான வாழை மரங்களைச் சேதப்படுத்திய காட்டுயானைகள் : இழப்பீடு கோரும் விவசாயிகள்

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காட்டு யானைகள் புகுந்து வாழை தோட்டங்களை சேதப்படுத்தியதால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காட்டு யானைகள் புகுந்து வாழை தோட்டங்களை சேதப்படுத்தியதால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேட்டுப்பாளையத்தில் உள்ள மலையடிவார கிராமங்களில் காட்டு யானைகளின் ஊடுருவலும், இதனால் ஏற்படும் சேதங்களும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. வாழை, தென்னை, கரும்பு, காய்கறி பயிர்கள் என விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்ட இக்கிராமங்களுக்குள் இரவானால் நுழையும் யானைகள் விளை பொருட்களை அழித்து சேதப்படுத்தி வருகின்றன. கடந்த சில நாட்களாக அருகில் உள்ள மலைக்காட்டை விட்டு வெளியேறும் பத்து யானைகள் கொண்ட கூட்டமொன்று கண்டியூர், பணப்பாளையம், தேக்கம்பட்டி, சீளியூர், தாயனூர் போன்ற மலையடிவார கிராமங்களில் புகுந்து தொடர்ந்து சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. 

இந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் பணப்பாளையம் கிராமத்தினுள் புகுந்த இந்த யானைக்கூட்டம், அங்குள்ள சாந்து பாஷா என்ற விவசாயியின் வாழை தோட்டத்தினுள் நுழைந்து 700-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை முறித்து சேதப்படுத்தியுள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் அடியோடு அழிக்கப்பட்டதால், ரூ. 2 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயி வேதனை தெரிவித்துள்ளார். கடன் பெற்று வாழை பயிரிட்ட தனக்கு, இதற்கான இழப்பீட்டை அரசு வழங்கினால் மட்டுமே தொடர்ந்து விவசாயத்தை தொடர இயலும் என்கின்றார் விவசாயி சாந்து பாஷா. 

காட்டு யானைகளால் தொடர்ந்து இழப்புகளை சந்தித்து வரும் கிராம விவசாயிகளுக்கு, வனத்துறை சார்பில் வழங்கப்படும் இழப்பீட்டு தொகை மிக குறைந்த அளவில் வழங்கப்பட்டாலும், கால தாமதமாக வழங்கப்படுவதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, வனத்துறையினர் உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்குவதோடு, யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்கும் வகையில், நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுகின்றனர்.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...