கோடை சுற்றுலா : பைக்காரா நீர்வீழ்ச்சியின் சிறப்புகள்

நீலகிரி: கோடைக்காலம் தொடங்கி விட்டதால், சமவெளி பகுதிகளில் நிலவும் வெப்பத்தை சமாளிக்க சுற்றுலாப் பயணிகள் குளிர்ச்சியான பகுதிகளுக்கு படையெடுக்கத் துவங்கியுள்ளனர்.

நீலகிரி: கோடைக்காலம் தொடங்கி விட்டதால், சமவெளி பகுதிகளில் நிலவும் வெப்பத்தை சமாளிக்க சுற்றுலாப் பயணிகள் குளிர்ச்சியான பகுதிகளுக்கு படையெடுக்கத் துவங்கியுள்ளனர். மேலும், ஆண்டு முழுவதும் உழைத்து களைத்த மக்கள், கோடை விடுமுறையைக் குடும்பத்துடன் கழிக்க மலை பிரதேசங்களுக்கும், குளிர் பிரதேசங்களுக்கும் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக, சுற்றுலா என்றாலே நம்ம ஊர் மக்கள் வண்டியை கிளப்பி உதகைக்குப் புறப்பட்டு விடுவார்கள். 



சரி..! அப்படி, உதகைக்கு செல்பவர்கள் எந்தெந்தப் பகுதிகளுக்கு செல்லலாம். அந்தப் பகுதியின் சிறப்புகள் என்ன..? என்பதை விளக்குவதற்காகத் தான் இந்த வாராந்திர கட்டுரை. 



உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பல்வேறு இயற்கை அழகு மிகுந்த இடங்களை ரசிக்கச் செல்கின்றனர். அப்படி, சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த இடங்களில் பைக்காரா நீர்வீழ்ச்சி பகுதியும் ஒன்று. உதகையிலிருந்து சுமார் 22 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது பைக்காரா நீர்வீழ்ச்சி. உதகை - கூடலூர் சாலையில் பைக்காராவிலிருந்து அரை கிலோ மீட்டர் நடந்து சென்றால் அழகிய நீர்வீழ்ச்சி பகுதியை அடையலாம். வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த நீர்வீழ்ச்சி பகுதியைக் காண ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அழகாக இருக்கும் இந்த நீர்வீழ்ச்சி பகுதியில் ஆபத்துகளும் நிறைந்துள்ளது.



நீர்சூழல் மற்றும் வழுக்குப் பாறைகள் இந்த நீர்வீழ்ச்சி பகுதியில் அதிகம் உள்ளதால் வனத்துறை சார்பில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் எக்காரணத்தைக் கொண்டும் தடுப்பு வேலிகளைத் தாண்டி செல்ல அனுமதிப்பது கிடையாது.



இந்த நீர்வீழ்ச்சி பகுதிக்கு கட்டணமாக ரூ. 10 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஆரம்ப நாட்களில் பராமரிப்பில்லாத பகுதியாகக் காணப்பட்டு வந்தாலும், அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் நிலையை மனதில் கொண்டு வனத்துறை சார்பில் பேட்டரி கார் இயக்கப்படுகிறது. 



மேலும், குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில், சிறுவர் பூங்கா மற்றும் பொம்மை புலியுடன் செல்பி எடுத்துக்கொள்வது என பல சிறப்பம்சங்கள் நிறைந்த பகுதியாக இந்த இடம் மாற்றப்பட்டுள்ளது. 



பேட்டரி காரில் பயணிப்பதற்குக் கட்டணமாக ஒருவருக்கு ரூ. 10 மட்டும் வசூலிக்கப்படுகிறது. 6 மற்றும் 8 பேர் கொண்ட இரண்டு வகையான பேட்டரி கார்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், மாற்று திறனாளிகள், குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, சுற்றுலாப் பயணிகளின் நலனைக் கருதி, அருவியில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என வனத்துறை சார்பில் ஆங்காங்கே எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. 

உதகையில் இயற்கை அழகை ரசிக்க வரும் சுற்றுலா பயணிகள் கட்டுப்பாடுகளை தயகூர்ந்து மீற வேண்டாம் என்பதே வனத்துறையின் வேண்டுகோளாக உள்ளது.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...