அகில இந்திய தொழிற்பழகுநர் தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்பு

அகில இந்திய தொழிற்பழகுநர் தொழிற் தேர்வில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அறிவித்துள்ளது.

அகில இந்திய தொழிற்பழகுநர் தொழிற் தேர்வில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மத்திய அரசு வழங்கும் தொழிற்பழகுநர் சான்றிதழ் (NAC) பெறும் பொருட்டு, அரசு/ தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் குறிப்பிட்ட தொழிற்பிரிவில் பயின்று தேசிய தொழிற் சான்றிதழ் (NTC) பெற்றவர்கள், இதே தொழிற்பிரிவில் தனி நபராக அகில இந்திய தொழிற்பழகுநர் தொழிற் தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்று தேர்ச்சி பெற்று தேசிய தொழிற்சான்றிதழ் பெற்றவர்கள், தொழிற்பழகுநர் பயிற்சியினை தொழிற்சாலைகளில் முடிக்காதவர்கள், தொழிற்பழகுநர் பயிற்சி வழங்கும் பட்டியலில் இடம்பெற்ற தொழில் நிறுவனங்களில் நேரடி பணியாளர்களாக குறைந்தபட்சம் அனுபவம் பெற்றவர்கள், மத்திய அரசு வழங்கும் தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் பெற விரும்பினால், தனி விண்ணப்பதாரராக இந்தத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

கோவை, அம்பத்தூர், கிண்டி, வடசென்னை, வேலூர், திருச்சி, கடலூர், தஞ்சாவூர், சேலம், ஒசூர், தாராபுரம், மேட்டூர் அணை, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்/ அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள தொடர் அறிவுரை மைய உதவி இயக்குநர்கள் ஆகியோரைத் தொடர்பு கொண்டு பிற விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...