நீலகிரி தோடர் மக்களின் 'எம்ராய்டரிக்கு' புவியியல் குறியீடு

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், பனியர், குரும்பர், காட்டுநாயக்கர், இருளர் ஆகிய ஆதிவாசி பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் ஒவ்வொரு ஆதிவாசி இனமக்களும் தங்களுக்கு என தனி பாரம்பரிய உடை, இருப்பிடம், பழக்கவழக்கங்களைக் கொண்டுள்ளனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், பனியர், குரும்பர், காட்டுநாயக்கர், இருளர் ஆகிய ஆதிவாசி பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் ஒவ்வொரு ஆதிவாசி இனமக்களும் தங்களுக்கு என தனி பாரம்பரிய உடை, இருப்பிடம், பழக்கவழக்கங்களைக் கொண்டுள்ளனர்.

குறிப்பாக தோடர் இன மக்கள் பாரம்பரிய 'எம்ராய்டரி' (பூ வேலைப்பாடு) மேற்கொள்வதில் வல்லவர்கள்.



இவர்கள் பாரம்பரியமாக உடுத்தும் ஆடை 'பூத்துக்குளி' விழா காலங்களிலும், இறுதி சடங்குகளிலும் தோடரின மக்கள் இந்த பாரம்பரிய ஆடையை உடுத்திக் கொண்டு தான் பங்கேற்க வேண்டும். பருத்தியாலான இந்த வெண்ணிற ஆடையில் சிவப்பு மற்றும் கருப்பு நிற நூலால், உடலில் பச்சை குத்துவது போல அதே வடிவமைப்பில் பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருப்பது இதன் தனி சிறப்பு. பூ வேலைப்பாடுகள் கையால் மட்டுமே செய்யப்படுவதால் இதன் விலை அதிகம்.

இந்த பூ வேலைப்பாடுகளால் கவரப்பட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இந்த ஆடைகளை ஆர்வமாக வாங்கி செல்கின்றனர். அதே நேரத்தில் இந்த ஆடை விலை அதிகமாக உள்ளதால் வர்த்தக ரீதியாக பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது பூ வேலைப்பாடுகள் அடங்கிய பிற பொருட்களைத் தயாரிக்க தொடங்கியுள்ளனர். தலையணை உறைகள், செல்போன் உறைகள், அலங்கார விரிப்புகள் என இவர்களது படைப்புகள் விரிவடைந்துள்ளன. 



இந்நிலையில் இவர்களின் பாரம்பரிய பூ வேலைப்பாடுகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் தோடர் பழங்குடியின பெண்கள் மேற்கொள்ளப்படும் பாரம்பரிய ‘தோடர் எம்ராய்டரி’ க்கும் (பூ வேலைப்பாடு) புவியியல் குறியீடு கிடைத்துள்ளது. இதற்காக கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தோடர் நலவாழ்வு சங்கம், கீ ஸ்டோன் நிறுவனம் ஆகியவை இணைந்து தோடர் இன பெண்களின் பாரம்பரிய பூ வேலைப்பாட்டிற்கு (எம்ராய்டரி) புவியியல் குறியீடு பெற சென்னையில் உள்ள புவியியல் குறியீட்டு பதிவகத்திற்கு விண்ணப்பிக்கப்பட்டது. 

இதற்கான முக்கிய நோக்கம் தோடர் இன பெண்களின் கலாச்சாரத்தை இன்றளவும் பிரதிபலிக்கும் பாரம்பரிய பூ வேலைப்பாட்டை புவியியல் குறியீடு மூலம் பாதுகாப்பதுடன் இந்த கலையை மேலும் வளர்ச்சி பெறவும் இந்த கலையை செய்து வரும் பெண்களுக்கு உரிய வருமானம் கிடைக்கவும் வழிவகை செய்வதாகும். 

இந்த புவியியல் குறியீட்டைப் பெற்றதன் மூலம் உலகிலேயே நீலகிரியில் வசிக்கும் தோடர் இன பெண்கள் செய்து வரும் பூ வேலைப்பாடு உலகில் வேறெங்கும் தயாரிக்கப்படுவதில்லை என உறுதியளிக்க முடியும். இந்த அறிய வகை கலைக்கு உலகளவில் ஒரு வியாபார உக்தியாக வைத்து விற்பனையை அதிகரிப்பதுடன் இக்கலையை விரும்பும் வாடிக்கையாளர்கள் இதன் தனித்தன்மையை உணர்ந்து அதற்கு உரிய விலை தர வழி வகை செய்யும்.



Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...