பேராசிரியை நிர்மலா தேவி மீது மேலும் 2 மாணவிகள் புகார்

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் மதுரை சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ள சந்தானம் குழுவிடம் மேலும் சில மாணவிகள் புகார் தெரிவித்தனர்.

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் மதுரை சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ள சந்தானம் குழுவிடம் மேலும் சில மாணவிகள் புகார் தெரிவித்தனர்.

அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த புகாரில் கைது செய்யப்பட்டார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். நிர்மலா தேவியின் 5 நாள் போலீஸ் காவலும் இன்று மதியம் 2.30 மணியோடு முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து, அவர் சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இதனிடையே, சி.பி.சி.ஐ.டி. போலீசார் 9 குழுக்களாக பிரிந்து அருப்புக்கோட்டை, விருதுநகர், மதுரை உள்ளிட்ட இடங்களில் நிர்மலா தேவி தொடர்பாக விசாரணை நடத்தி ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர்.

இதனிடையே, நிர்மலா தேவியுடன் தொடர்புடைய மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன் கைது செய்யப்பட்டார். ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியும் மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவர்களிடமும் விசாரணை விரிவடைந்துள்ளது.

மறுபுறம், ஆளுநர் நியமித்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம், நிர்மலா தேவி விவகாரம் குறித்து கடந்த 18-ந் தேதி முதல் விசாரணையை நடத்தி வருகிறார். பல்கலைக்கழக துணை வேந்தர், பதிவாளர் மற்றும் பேராசிரியர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகிகள், மாணவிகளிடம் 3 நாட்களாக சந்தானம் விசாரணை நடத்தினார். இதையடுத்து, சென்னை சென்ற அவர், இன்று காலை மீண்டும் மதுரை வந்தார். மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ள சந்தானம் 2-ம் கட்ட விசாரணையை இன்று தொடங்கினார்.

அப்போது, அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியைச் சேர்ந்த 2 மாணவிகள், நிர்மலா தேவி மீது புகார் தெரிவித்து சந்தானத்திடம் மனுக்களாக அளித்தனர். அந்த மனுக்களை மாணவிகளின் சார்பில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர், முத்துக்குமார், சந்தானத்திடம் வழங்கினார். மாணவிகள் மைனர் என்பதால், சிறார் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விசாரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாகவும் சந்தானம் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளார்.

மேலும், நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த சிறை அதிகாரிகளிடம் அனுமதி பெறவும் சந்தானம் திட்டமிட்டுள்ளார். நாளை அல்லது நாளை மறுநாள் மதுரை மத்திய சிறையில் நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...