எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் 3-வது அணிக்கு ஸ்டாலின் ஆதரவு : காங்கிரசுடனான கூட்டணிக்கு முற்றுப்புள்ளியா..?

பா.ஜ.க., காங்கிரஸ் அல்லாமல் எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து உருவாக்கும் மெகா கூட்டணிக்கு தி.மு.க. செயல்தலைவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க., காங்கிரஸ் அல்லாமல் எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து உருவாக்கும் மெகா கூட்டணிக்கு தி.மு.க. செயல்தலைவர் ஆதரவு தெரிவித்துள்ளார். 

தேசிய அளவில் மாநில கட்சிகளை ஒன்றிணைத்து பா.ஜ.க, காங்கிரஸ் இல்லாத மெகா கூட்டணியை உருவாக்க மேற்குவங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தெலுங்கானா மற்றும் ஆந்திர முதலமைச்சர்களும் முயற்சித்து வருகின்றனர். இந்தக் கூட்டணியில் தி.மு.க.,வை இணைய வருமாறு மார்ச் மாதம் செயல் தலைவர் ஸ்டாலினுக்கு மம்தா அழைப்பு விடுத்தார். இதன் தொடர்ச்சியாக இம்மாதம் சென்னை வந்து தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்திக்கவும் மம்தா திட்டமிட்டிருந்தார். ஆனால் மம்தாவின் அழைப்புக்கு தி.மு.க. தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், இன்று ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், மாநில கட்சிகளை ஒன்றிணைத்து வலுவான கூட்டணியை உருவாக்கும் முயற்சிக்கு தி.மு.க., எப்போதும் ஆதரவு அளிக்கும். பா.ஜ.க.,வின் ஜனநாயக விரோத, சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக பல்வேறு மாநில கட்சிகளை இணைக்கும் மம்தாவின் முயற்சியைப் பாராட்டுகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வரை காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்து வரும் தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., அல்லாத 3-வது அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதன்மூலம் காங்கிரசுடன் கூட்டணியை முறித்துக் கொள்ளும் முடிவுக்கு தி.மு.க., வந்துள்ளதா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...