ஸ்மார்ட் திட்டங்கள் குறித்து நாடாளு., நிலைக்குழுவிடம் கோவை மாநகராட்சி ஆணையர் இன்று விளக்கம்

கோவை: கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து டெல்லியில் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன் இன்று எடுத்துரைக்கிறார்.

கோவை: கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து டெல்லியில் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன் இன்று எடுத்துரைக்கிறார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை முதற்கட்டமாக செயல்படுத்த 100 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில், கோவையும் இடம்பெற்றிருந்தது. மத்திய - மாநில அரசுகளின் நிதி மற்றும் மாநகராட்சியின் பங்களிப்போடு பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மிதிவண்டி பகிர்தல், ஸ்மார்ட் பள்ளிகள், நீர்நிலைகள் மேம்பாடு, சென்சார் போர்டுகள் போன்ற திட்டங்கள் கோவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

மேலும், கட்டிடக் கழிவு மறுசுழற்சி மையம், மாதிரி சாலை உருவாக்குதல் போன்ற திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளன. இவ்வாறு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகளை மத்திய அரசு அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வும் செய்து வருகின்றனர். இந்நிலையில், கோவை மாநகராட்சியின் பணிகளை அங்கீகரிக்கும் விதமாக, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் நகரின் பட்டியலில் கோவை ஒன்பதாவது இடத்தைப் பெற்றுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வரும் மாநகராட்சியின் அதிகாரிகள், தங்களின் செயல்பாடுகளை டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு இன்று எடுத்துரைக்கின்றனர். கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், அதிகாரிகளிடம் விளக்குகிறார். ராஜ்கோட், பூனே, புவனேஷ்வர், விசாகப்பட்டினம், கொச்சி மற்றும் டெல்லி ஆகிய நகரைச் சேர்ந்த அதிகாரிகளும் இதில் பங்கேற்கின்றனர். சிறப்பாக செயல்பட்ட மாநகராட்சிகளில், தமிழகத்தில் இருந்து கோவை மாநகராட்சி மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...