சுகாதார சீர்கேட்டின் இருப்பிடமாக திகழும் கோவை மாநகராட்சி: தி.மு.க., எம்.எல்.ஏ., கார்த்திக் விமர்சனம்

கோவை: கோவை மாநகராட்சி சுகாதார சீர்கேட்டின் இருப்பிடமாக திகழ்ந்து வருவதாக தி.மு.க., எம்.எல்.ஏ., நா.கார்த்திக் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை: கோவை மாநகராட்சி சுகாதார சீர்கேட்டின் இருப்பிடமாக திகழ்ந்து வருவதாக தி.மு.க., எம்.எல்.ஏ., நா.கார்த்திக் குற்றம்சாட்டியுள்ளார்.

தி.மு.க., மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக், உப்பிலிபாளையம் அருகே உள்ள ஜி.வி. ரெசிடென்சி பகுதியில் பாதாள சாக்கடை பணிக்காக சாலைகள் தோண்டப்பட்டு, சீரமைக்காமல் கிடக்கும் இடங்களை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள், மாநகராட்சி சார்பில் செய்யப்பட வேண்டிய பணிகள் மற்றும் அப்பகுதியில் உள்ள குறைகளை கூறினர். சாலைகள் அமைக்கப்படாமலும், சாலைகள் முழுவதும் புதர்கள் மண்டி கிடப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினார்.



இந்த ஆய்வுக்கு பின்னர் நா.கார்த்திக் கூறுகையில், "தி.மு.க., ஆட்சியின்போது, கோவை மாநகராட்சி பாதாள சாக்கடை பணிக்காக ரூ. 377 கோடி ஒதுக்கப்பட்டு, பாதாள சாக்கடை பணி துவக்கபட்டது. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு முழுமையாக செயல்படாமல் ஆமை வேகத்தில் இப்பணி நடைபெற்று வருகிறது. மேலும், மாநகராட்சியின் பல பகுதிகளில் குழிகள் தோண்டப்பட்டு மூடப்படாமல் உள்ளது. கேபிள் பதிப்பதற்காக ஒரு கிலோ மீட்டருக்கு அனுமதி பெறப்பட்டு, 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழி தோண்டியுள்ளனர். இதனால், பொதுமக்களுக்கு விபத்துகள் ஏற்படுகிறது. இதுதொடர்பாக அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை.

இந்தப் பகுதியில் அனைவரும் முழுமையான வரியை செலுத்தியபோதும் கூட இப்பகுதியில் சாலைகள் அமைக்கப்படாமல் உள்ளது. கோவையைச் சேர்ந்த உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி எவ்வித பணிகளும் செய்வதில்லை. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இப்பகுதியில் சாலைகள் அமைக்கப்பட வேண்டும். இல்லையெனில், கூட்டணி கட்சிகளுடன் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம். செயழிலந்த மாநகராட்சியாக கோவை மாநகராட்சி திகழ்ந்து வருகிறது. சுகாதார சீர்கேட்டின் இருப்பிடமாகவும் இருக்கிறது. ஒட்டுமொத்த மாநகராட்சியும் தற்போது முடங்கிக் கிடக்கிறது.

இந்த ஆய்வின்போது, ஜி.வி.ரெசிடென்சி நல்வாழ்வு சங்கத்தின் தலைவர் நரசிம்மன், செயலாளர் செல்வகுமார், வார்டு செயலாளர்கள் சிவக்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...