இந்திய வரைபடத்தில் இருந்து தமிழகத்தை அகற்றியவர்கள், மொழியை எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள் : டிடிவி தினகரன்

கோவை : இந்தியா வரைபடத்தில் இருந்து தமிழகத்தையே அகற்றியவர்கள், தமிழ்மொழியை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என மத்திய அரசு தமிழ் மொழியைப் புறக்கணித்துள்ளது குறித்து அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.


கோவை : இந்தியா வரைபடத்தில் இருந்து தமிழகத்தையே அகற்றியவர்கள், தமிழ்மொழியை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என மத்திய அரசு தமிழ் மொழியைப் புறக்கணித்துள்ளது குறித்து அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது :- சென்னையில் மதுசூதனனுடன் இருக்கும் மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள்தான் போராட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு திருநாவுக்கரசர் அழைப்பு விடுத்தது போகாத ஊருக்கு அவர் வழி சொல்வது போல இருக்கிறது. திவாகரன் போன்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பேசும் கருத்துகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. யாருடனும் எனக்கு நெருடல் கிடையாது. சதிகாரர்களின் வலையில் விழுந்தவர்கள் இப்படிப் பேசுகின்றனர். 

அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை. பா.ஜ.க., வினருக்கு தமிழகத்தில் வாக்கு வங்கி கிடையாது. கர்நாடக மாநில தேர்தலை மனதில் வைத்து பா.ஜ.க., செயல்படுகின்றனர். எனவே, நாடாளுமன்ற தேர்தல் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாது, என்றார். 

மேலும், "திவாகரன் மற்றும் தினகரன் விரைவில் காணாமல் போய் விடுவார்கள் என முதலமைச்சர் பேசியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "முன்னாள் முதலமைச்சர்கள் பலர் காணாமல் போனது போல, எடப்பாடி பழனிச்சாமியும், ஓ. பன்னீர்செல்வமும் காணாமல் போய்விடுவார்கள். தமிழகத்தையே இந்தியா வரைபடத்தில் இருந்து எடுத்துவிட்டனர். தமிழ் மொழியையா மத்திய அரசில் இருப்பவர்கள் ஏற்றுக் கொள்ளப்போகின்றனர்," எனக் கூறினார். 

இதைத்தொடர்ந்து, ரூ. 20 விவகாரத்தில் ஆர்.கே. நகரில் முற்றுகையிட்ட பெண்கள் மதுசூதனன் ஆட்கள் என்பதற்கான புகைப்பட ஆதாரத்தையும் செய்தியாளர் சந்திப்பின் போது வெளியிட்ட தினகரன், "இதுபோல நிறைய ஆதாரங்கள் தன்னிடம் இருக்கிறது. மேலும் கூட்டுறவு சங்கத் தேர்தலில் ஆளும் கட்சியினர் அராஜகம் நடத்துகின்றனர். சட்டரீதியாக இதைப் போராடி வெல்வோம். திவாகரன் குறித்த எந்த ஒரு கேள்விகளுக்கு பதில் சொல்ல போவதில்லை. அது நேரத்தை வீணடிக்கும் செயல். 18 எம்.எல்.ஏ., வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்," எனத் தெரிவித்தார்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...