பல்லடத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான மனு பரிசீலனையில் கலவரம் : தேதி குறிப்பிடாமல் தேர்தல் ஒத்திவைப்பு

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடம் உழவர் பணிக்கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பரிசீலனையின் போது, நாற்காலிகள், மேசைகள் உள்ளிட்டவை அடித்து உடைக்கப்பட்டதால், தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடம் உழவர் பணிக்கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பரிசீலனையின் போது, நாற்காலிகள், மேசைகள் உள்ளிட்டவை அடித்து உடைக்கப்பட்டதால், தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. 

பல்லடம் பேருந்து நிலையம் அருகே தொடக்க வேளாண்மை உழவர் பணிக்கூட்டுறவு சங்கம் உள்ளது. இச்சங்கத்திற்கான தேர்தல் மற்றும் வேட்பு மனு தாக்கல் கடந்த 30-ம் தேதியன்று தேர்தல் அலுவலர் கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது. இதில், ஆளும் அ.தி.மு.க., தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களின் மீதான பரிசீலனை இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தி.மு.க., அ.தி.மு.க. ,உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அங்கு பெருமளவு திரண்டிருந்தனர்.



தேர்தல் அலுவலர் கண்ணன் மனுக்களைப் பரிசீலனை செய்து கொண்டிருந்த போது, வங்கியில் புகுந்த 10-க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் ஒன்று தேர்தல் அலுவலரிடம் இருந்த மனுக்களைப் பிடுங்கி கிழித்து வீசியது. மேலும், அலுவலகத்தில் இருந்த மேசை, நாற்காலிகள், பல்புகளை அடித்து நொறுக்கி சூறையாடிவிட்டு அக்கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இதையடுத்து, தேர்தல் அலுவலர் கண்ணன் இச்சம்பவம் குறித்து பல்லடம் காவல்நிலையத்தில் புகாரளித்தார்.



இதனைத் தொடர்ந்து, போலீசார் தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் கண்ணன் கொடுத்த தகவலின் பேரில் மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். பின்னர், இந்தக் கலவரத்தின் காரணமாக தேர்தல் தேதிக் குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி அறிவித்தார். 

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...