கூடலூரில் யானை தாக்கி இளைஞர் பலி: பாதுகாப்பு வேண்டி பொதுமக்கள் சாலை மறியல்

நீலகிரி: கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி இளைஞர் உயிர் இழந்த சம்பவத்தில் யானைகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்கக் கோரி கூடலூர் - கேரளா நெடுஞ்சாலையில் அப்பகுதி மக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


நீலகிரி: கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி இளைஞர் உயிர் இழந்த சம்பவத்தில் யானைகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்கக் கோரி கூடலூர் - கேரளா நெடுஞ்சாலையில் அப்பகுதி மக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள கருக்கபாளி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (29). நேற்று இரவு காட்டு யானை தாக்கியதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த நிலையில், அப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை விரட்ட வேண்டும், கிராமத்தைச் சுற்றி அகழி வெட்ட வேண்டும், சோலார் மின்வேலி அமைத்து காட்டு யானைகளிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை அப்பகுதி மக்கள் தமிழக - கேரளா நெடுஞ்சாலையில் உள்ள பாடந்துறை பகுதியில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்துறை, காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் காட்டு யானைகளிடம் இருந்து அப்பகுதி மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக தமிழகம் - கேரளா இடையே ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...