செல்போன் வாங்கித் தராததால் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவன்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடம் பெற்றோர் செல்போன் வாங்கித் தராத காரணத்தால் 8-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடம் பெற்றோர் செல்போன் வாங்கித் தராத காரணத்தால் 8-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 



பல்லடம் பனப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. பனியன் தொழிலாளியான இவருக்கு வேணி என்ற மனைவியும், வசந்த், பிரேம்நாத் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். வசந்த 10-ம் வகுப்பும், பிரேம்நாத் 8-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். 

இந்நிலையில், கடந்த சில தினங்களாக பிரேம்நாத் தனது பெற்றோரிடம் செல்போன் வாங்கி தரும்படி கேட்டுள்ளதாகத் தெரிகிறது. சில நாட்கள் கழித்து வாங்கி தருவதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். 



இந்த நிலையில், இன்று காலை ரவி வேலைக்கு கிளம்பிய போது, பிரேம்நாத் மீண்டும் போன் கேட்டுள்ளார். சில நாட்கள் கழித்து வாங்கித் தருவதாக சொல்லி விட்டு, ரவி வேலைக்கு சென்று விட்டார். தாயார் வேணியும், வசந்த்தும் வெளியே சென்றிருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த பிரேம்நாத் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

அதனைத் தொடர்ந்து, வீட்டிற்கு வந்து பார்த்த வேணி மகன் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து, தனது கணவருக்கு தகவல் அளித்தார். 



அதனைத் தொடர்ந்து, போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...