வேளாண் பல்கலையில் மே 7-ல் தேனி வளர்ப்பு பயிற்சி முகாம்

கோவை : கோவை வேளாண்மைப் பலகலைக்கழகத்தில் வரும் 7-ம் தேதி தேனி வளர்ப்பு குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

கோவை : கோவை வேளாண்மைப் பலகலைக்கழகத்தில் வரும் 7-ம் தேதி தேனி வளர்ப்பு குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், பூச்சியியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் தேனீ வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகின்றது. இந்தப் பயிற்சி முகாமில் தேனீ இனங்களைக் கண்டுபிடித்தல், பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை, தேனைப் பிரித்தெடுத்தல் உள்ளிட்ட தேனி வளர்ப்பு முறைகள் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுகின்றது.

அதன்படி, நடப்பு மாதத்திற்கான தேனி வளர்ப்பு பயிற்சி முகாம் வரும் 7-ம் தேதி அப்பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 நடைபெறும் பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. 

ரூ.250 என்ற பயிற்சி கட்டணத்தில் நடத்தப்படும் இதில் கலந்து கொள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் பூச்சியியல் துறையைத் தொடர்பு கொள்ளலாம். 0422-6611214 என்ற தொலை பேசி எண் மூலமாகத் தகவல்களை பெறலாம். 

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...