உதகையில் 'சாம்பியன்ஷிப்' நாய்கள் கண்காட்சி தொடக்கம்

நீலகிரி : கோடை சீசனையொட்டி உதகையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சாம்பியன்ஷிப் நாய் கண்காட்சி இன்று தொடங்கியது.

நீலகிரி : கோடை சீசனையொட்டி உதகையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சாம்பியன்ஷிப் நாய் கண்காட்சி இன்று தொடங்கியது. 



தென்னிந்திய கென்னல் கிளப் சார்பில் ஆண்டுதோறும் உதகையில் 'சாம்பியன்ஷிப்' நாய்கள் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 125 -வது நாய்கள் கண்காட்சி இன்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வந்துள்ள பலதரப்பட்ட நாய்கள் பங்கேற்றுள்ளன. 



தேசிய அளவில் நாட்டின் பல்வேறு இடங்களில் நடத்தப்படும் பெரிய அளவிலான நாய்கள் கண்காட்சியில் ஒன்றாக கருதப்படும் இந்த கண்காட்சியில் 44 இனங்களைச் சார்ந்த 800-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற ஆயுத்தமாகியுள்ளன. 

ஜெர்மன் ஷெப்பர்டு, லேப்ரடார், ரெட்ரீவர்ஸ், கோல்டன் ரெட்ரீவர்ஸ், பக்ஸ், கிரேட் டேன்ஸ், டாபர்மென் என பலதரப்பட்ட நாய்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்று கீழ்ப்படிதல், மோப்ப சக்தி, ஒய்யாரமாக நடந்து வருவது என பல்வேறு தகுதிகளை வெளிப்படுத்தி வருகின்றன. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாய் இனங்களில் சிறந்ததை தேர்ந்தெடுக்கும் தனித்துவ நாய் கண்காட்சியும் நடத்தப்படுகிறது. சீசனையொட்டி உதகை வந்துள்ள சுற்றுலா பயணிகள் நாய்கள் கண்காட்சியை கண்டு ரசித்துச் செல்கின்றனர். 

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...