மூளைச் சாவு அடைந்த திருப்பூர் பெண் 7 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார்

கோவை: திருப்பூரை சேர்ந்த மூளைச்சாவடைந்த பெண், ஏழு பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார்.

கோவை: திருப்பூரை சேர்ந்த மூளைச்சாவடைந்த பெண், ஏழு பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார்.

பல்லடத்தை அடுத்த K.S.N.புரம் பகுதியை சேர்ந்தவர் வாசன் இவரது மனைவி கோமதி (32). சாலை விபத்து ஒன்றில் தலையில் பலத்த காயமடைந்த அவரை கோவையில் உள்ள கே.எம்.சி.எச் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 5-ம் தேதி கோமதிக்கு மூளைச் சாவு ஏற்பட்டது.

இதனால், அவரது கணவர் வாசன், தனது மனைவியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தார். இதனைத் தொடர்ந்து, கோமதியின் இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், எலும்பு, தோல் மற்றும் கண்கள் ஆகியவை தானமாக வழங்கப்பட்டது.

தானம்

கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும், இதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், எலும்பு மற்றும் தோல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் மற்றும் கண்கள் கோவையைச் சேர்ந்த மற்றொரு தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.

அதன்படி, மரணமடைந்த கோமதி ஏழு பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...