டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா மரணம் தற்கொலையே: வழக்கை முடித்து வைக்கிறது சி.பி.ஐ.

கோவை: கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை அதிகாரியான டி எஸ் பி விஷ்ணுபிரியா மரணம், தற்கொலைதான் எனக் கூறி இந்த வழக்கை முடித்து கொள்வதாகக் கூறி சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்துள்ளது.



கோவை: கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை அதிகாரியான டி எஸ் பி விஷ்ணுபிரியா மரணம், தற்கொலைதான் எனக் கூறி இந்த வழக்கை முடித்து கொள்வதாகக் கூறி சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கோகுல்ராஜ் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த டி.எஸ்.பி., விஷ்ணுபிரியா கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தத் தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரித்து வந்த நிலையில், அதனை சி.பி.ஐ.,க்கு மாற்றம் செய்யக் கோரி விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனடிப்படையில் வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது.

இந்த சூழலில் கடந்த டிசம்பர் மாதம் விசாரணையை முடித்துக் கொண்ட சி.பி.ஐ., கோவை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தது. அதில், விஷ்ணுபிரியா மரணம் தற்கொலையே. தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லாததால் விசாரணையை முடித்துக் கொள்வதாக கூறியிருந்தது. இதையடுத்து, கோவை மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றம் சி.பி.ஐ., அறிக்கையின் முகாந்திரத்தைச் சுட்டிக்காட்டி விஷ்ணு பிரியாவின் தந்தைக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அதில், சி.பி.ஐ., அறிக்கையில் ஏதேனும் கருத்துக்கள் கூற விரும்பினால் வருகிற 9-ம் தேதி கோவை நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதன்படி, நாளை மறுதினம் கோவை வரும் அவரது தந்தை, சி.பி.ஐ., அறிக்கையைப் படித்து பார்த்த பின்பு, அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...