பள்ளிகளின் வாகனங்களை ஆய்வு செய்யும் பணியை தொடங்கி வைத்தார் கோவை ஆட்சியர்

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் இன்று தொடங்கி வைத்தார்.

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் இன்று தொடங்கி வைத்தார்.

மாணவ, மாணவியரின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு, பள்ளி பேருந்துகளில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும் என தமிழக அரசு விதிமுறைகளை வகுத்துள்ளது. அதனடிப்படையில், ஆண்டுதோறும் பள்ளி விடுமுறை நாட்களில் பள்ளி பேருந்துகள் சோதனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான பள்ளி வாகன சோதனை கோவை பி.ஆர்.எஸ்., மைதானத்தில் இன்றும், நாளை மறுதினமும் நடக்கிறது.



இன்று மட்டும் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து 488 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு வந்து உள்ளன. இந்த வாகனங்களில் பள்ளியின் பெயர், முகவரி, குழந்தைகள் ஏறிச் செல்லும் படிகளின் அளவு, ஜன்னல்களின் அளவு, எதிரொலிக்கும் ஸ்டிக்கர்கள், நம்பர் பிளேட்டுகள், முதலுதவி பெட்டிகள், தீயணைப்பு கருவிகள், அவசர கால வழி, வேகக்கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட 19 வகையான ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. மேலும், பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு வாகனம் இயக்குவது மற்றும் பராமரிப்பு குறித்து அறிவுரைகளும் வழங்கப்பட்டது. அதேபோல, 16 வகையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.



இந்த ஆய்வில் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் பேசுகையில், "இந்த ஆய்வானது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி, ஒவ்வொரு ஆண்டும் வருவாய் துறை, கல்வித் துறை, போக்குவரத்து துறை உள்ளிட்டவை இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டு வருகிறோம். அதன்படி, இந்த ஆண்டும் ஆய்வுப் பணி முதற்கட்டமாக நடைபெறுகிறது. இதில், பள்ளி வாகனங்களில் அவசரகால வழி படிக்கட்டுகளின் அளவுகள் போன்ற 19 வகையான பரிசோதனைகள் செய்யப்படுகின்றன," என்றார்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...