கர்நாடகா தேர்தலுக்கு பின்னர் காவிரி வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய உத்தரவு

காவிரி வரைவு செயல் திட்டத்தை கர்நாடக தேர்தல் முடிந்த பிறகு, அதாவது வரும் 14-ம் தேதி தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

காவிரி வரைவு செயல் திட்டத்தை கர்நாடக தேர்தல் முடிந்த பிறகு, அதாவது வரும் 14-ம் தேதி தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனையில் மத்திய அரசு வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் இருப்பதால் அதற்கு கூடுதல் அவகாசம் வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இதனிடையே, கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் நேற்று அறிக்கை தாக்கல் செய்திருந்தது. அதில், ஏற்கனவே ஒதுக்கப்பட்ட பங்கீட்டை விட கூடுதல் நீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. எனவே, தண்ணீர் திறக்க முடியாது. மேலும், போதிய மழை இல்லாததால், இங்கு குடிப்பதற்கே தண்ணீர் இல்லை, என அதில் கூறப்பட்டிருந்தது.

இதேபோல, தமிழக அரசும் நேற்று உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், “கர்நாடக அணைகளில் தற்போது 19 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. அதில், 4 டி.எம்.சி தண்ணீரை உடனே ஒதுக்க உத்தரவிட வேண்டும். மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உடனே உத்தரவிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பல்வேறு தரப்பினரின் வாதங்கள் நடைபெற்றது. காவிரி வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசின் சார்பில் மேலும் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, வரும் 14-ம் தேதி வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழக அரசு நேற்று தாக்கல் செய்த மனு எப்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படவில்லை. வரும் 12-ம் தேதி கர்நாடக தேர்தல் நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலை மனதில் கொண்டே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு தயக்கம் காட்டி வருவதாக ஒருபுறம் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...